சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் | மீண்டும் நடிக்க வந்த அர்ச்சனா ரவி |

பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக மிகப்பெரிய படைப்பாக உருவாகி வருகிறது கல்கி 2898 ஏடி. நாக் அஸ்வின் இயக்கி வரும் இந்த படத்தில் தமிழில் இருந்து கமல்ஹாசன், பாலிவுட்டிலிருந்து அமிதாப்பச்சன் என சீனியர் ஜாம்பவான் நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பிக்சனுடன் கூடிய வரலாற்று படமாக உருவாகி வரும் இந்த படத்தில் கதாநாயகியாக தீபிகா படுகோனே நடித்து வருகிறார். வரும் ஜூன் 27ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் வியாபாரங்களும் துவங்கி விட்டன. அந்த வகையில் இந்த படத்தின் கன்னட வெளியீட்டு உரிமையை பிரபல கன்னட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்சன்ஸ் கைப்பற்றியுள்ளது. இந்த நிறுவனம்தான் தற்போது தேசிய விருது இயக்குனரும் நடிகையுமான கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் கதாநாயகனாக நடித்து வரும் டாக்ஸிக் என்கிற படத்தையும் தயாரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.