'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பிரபல ஆக்ஷன் இயக்குனர் மோகன் பகத். இவரின் மகன் சோனு பகத், "டிராவல் ஏஜென்ட்" என்ற பஞ்சாபி படத்தின் மூலம் நாயகனாக சினிமாவில் நுழைந்துள்ளார். இவருடன் பூனம் சூட், பிரப் கிரேவால், கக்கு கில், ஷவிந்தர் மஹால், விஜய் டாண்டன், அவதார் கில் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பல்ஜிந்தர் சிங் சித்து இயக்குகிறார்.
பஞ்சாபைச் சேர்ந்த பலர் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்கிறார்கள். அப்படி செல்வோர் பெற்றோரையும், குடும்பத்தையும், விவசாயத்தையும் விட்டுவிட்டு வெளியூர் சென்று உழைக்கிறார்கள். இளைஞர்கள் தங்கள் நாட்டில் தங்கி பெற்றோருக்கு சேவை செய்து விவசாயம் செய்ய வேண்டும் என்ற கருத்தை இப்படம் பேச இருக்கிறது.
இந்த படத்தின் துவக்க விழாவை மூத்த நடிகர் தர்மேந்திரா கிளாப் அடித்து துவக்கி வைத்ததோடு, சோனு பகத்தின் சினிமா பயணத்திற்கும் தனது வாழ்த்தை தெரிவித்தார். தர்மேந்திராவின் உறவினர் சோனு. இதுபற்றி தர்மேந்திரா கூறுகையில், ‛‛சோனு பகத்தின் முதல் படத்திற்காக ஆசிர்வதிக்க வந்துள்ளேன். சோனு திறமையானவர் . பஞ்சாபி படங்களில் அவர் அறிமுகமாகிறார். இதில் எனக்கான கதாபாத்திரம் இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன்" என்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் பஞ்சாப் மற்றும் உத்தரகாண்டில் நடைபெறவுள்ளது.