என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
பாலிவுட் முன்னணி நடிகையான கங்கனா ரணாவத் ஹிந்தி மட்டுமல்லாது தமிழ் திரையுலகில் நுழைந்து சில படங்களில் நடித்தார். தொடர்ந்து தனது படங்கள் குறித்த செய்திகளில் மட்டுமல்லாது அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை அவ்வப்போது கூறி அரசியல் அரங்கிலும் கூட பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். தேசிய கட்சியான பாஜக மீதும் பிரதமர் மோடி மீதும் மரியாதை கொண்ட கங்கனா தற்போது நடைபெற்று வரும் 2024க்கான லோக்சபா தேர்தலில் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள மாண்டி தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
முதல் முறையாக தேர்தலை சந்திக்கும் இவர் தனது தொகுதி முழுக்க பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்த சமயத்தில் அவரது பிரச்சாரங்களில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் அவர் பேசும் பேச்சு சோசியல் மீடியாவில் வைரல் ஆனது.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, “ராஜஸ்தான், மேற்கு வங்கம் மற்றும் டில்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு நான் பிரச்சாரத்திற்கு சென்றபோது எனக்கு கிடைத்த மரியாதையும் வரவேற்பையும் பார்க்கும்போது பிரமிப்பாக இருந்தது. திரையுலகில் இருந்து அமிதாப் பச்சனுக்கு பிறகு இப்படி ஒரு அன்பும் மரியாதையும் இந்த மக்களிடம் இன்னொருவருக்கு கிடைத்திருக்கிறது என்றால் அது எனக்கு மட்டும்தான் என என்னால் உறுதியாக சொல்ல முடியும்” என்று பெருமையுடன் கூறியுள்ளார் கங்கனா.