வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா | உடும்புபிடியில் அஜித் : இழந்தது பல கோடி | ஹைப்பர் லிங் ஜார்னரில் உருவாகும் 'தி ஒன்' | சலீம் குமார் இறுதி சடங்கில் யு டியூப்பர்கள் அட்டகாசம் : போலீஸ் எச்சரிக்கை | ஆர்த்தி ஜீவனாம்சத்திற்கு காலக்கெடு கேட்ட ரவி மோகன் வழக்கு தள்ளுபடி |

பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய். கதையின் நாயகனாகவும், குணசித்ர வேடங்களிலும் தனது ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பின் மூலம் புகழ்பெற்றவர். 1994ல் ஷேகர் கபூர் இயக்கிய 'பண்டிட் குயின்' படத்தில் அறிமுகமான இவர் ராம்கோபால் வர்மா இயக்கிய 'சத்யா' படத்தின் மூலம் மேலும் பிரபலமானார்.
'கேங்ஸ் ஆப் வசிப்பூர்', உள்ளிட்ட படங்கள் மூலமும், 'தி பேமிலி மேன்' உள்ளிட்ட வெப் தொடர்கள் மூலமும் இந்தியா முழுக்க அறிந்த நடிகர் ஆனார். தமிழில் அஞ்சான், சமர் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இதுவரை 3 தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.
தற்போது அவர் பல படங்களில் நடித்து வந்தாலும் அவரது 100வது படமாக வெளிவருகிறது 'பய்யா ஜி'. இந்த படத்தை அபூர்வ் சிங் கார்கி இயக்குகிறார். மனோஜ் பாஜ்பாயுடன் சோயா ஹுசைன், சுவிந்தர் விக்கி, ஜிதின் கோஸ்வாமி உள்பட பலர் நடிக்கிறார்கள். படம் வருகிற 24ம் தேதி வெளிவருகிறது. இந்த நிலையில் படத்தின் டிரைலர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா மும்பை அந்தேரியில் நடந்தது.
இதில் பேசிய மனோஜ் பாஜ்பாய், “நான் 10 படங்களுக்கு மேல் நடிப்பேன் என நினைத்ததில்லை. ஆனால் வாழ்க்கை என்னை 100 படங்களில் நடிக்க அனுமதித்துள்ளது. இதனால் நான் மட்டுமே கடின உழைப்பை செய்கிறேன் என்று அர்த்தமில்லை. அனைத்து கலைஞர்களுமே தினமும் போராடுகிறார்கள். கடவுள், ரசிகர்களின் ஆதரவினால் மட்டுமே நான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன்” என்றார்.