தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' | 'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு | ‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் |
அமீர்கான் நடிப்பில் கடந்த 1999ல் வெளியான படம் 'சர்பரோஸ்'. இந்த படத்தை மலையாளத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜான் மேத்யூ மாத்தன் என்பவர் இயக்கி இருந்தார். சோனாலி பிந்த்ரே கதாநாயகியாக நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் நஸ்ருதீன் ஷா, முகேஷ் ரிஷி, பிரதீப் ராவத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் ஏசிபி அஜய் சிங் ரத்தோட் என்கிற கதாபாத்திரத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக அமீர்கான் நடித்திருந்தார். தற்போது இந்த படம் வெளியாகி 25 வருடங்களை கடந்துள்ளது.
இதனை கொண்டாடும் விதமாக சமீபத்தில் மிகப்பெரிய திரையரங்கு ஒன்றில் இந்த படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதில் படத்தில் பங்கு பெற்ற அமீர்கான் உள்ளிட்ட கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர். திரையிடலுக்குப் பிறகு இந்த படம் குறித்து தங்களது அனுபவங்களை பலரும் பகிர்ந்து கொண்டனர். அப்போது அமீர்கான் பேசும்போது, “படத்தை பார்க்கும்போது எனக்கு ஒன்றும் இப்போது வயது அதிகமாகிவிட்டதாக தெரியவில்லை. இந்த சமயத்தில் இதன் இரண்டாம் பாகத்தை அறிவிப்பது தான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.. நிச்சயம் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும்” என்று உறுதிப்பட கூறினார்.