சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

ஒரு காலத்தில் இந்திய கால்பந்து அணி சிறந்த அணிகளில் ஒன்றாக விளங்கியது. 1952 முதல் 1962 வரையில் அந்த அணிக்கு கோச் ஆகப் பணிபுரிந்தவர் சையத் அப்துல் ரகீம். அவரது பயோபிக் படமாக 'மைதான்' படம் கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி வெளிவந்தது.
அமித் ஷர்மா இயக்கத்தில், அஜய் தேவ்கன், பிரியாமணி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக போனி கபூர் இப்படம் ஏன் தோல்வியடைந்தது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
“நாங்கள் தேர்வு செய்த கதை சிறப்பான ஒன்று. அஜய் தேவ்கன் மிகவும் சிறப்பாகவே நடித்திருந்தார். ஆனால், ரசிகர்கள் என்ன மாதிரியான படத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதை கணிக்கத் தவறிவிட்டோம். இப்போதெல்லாம் 'ஆர்ஆர்ஆர், ஜவான், பதான்” போன்ற படங்களையே ரசிகர்கள் விரும்பிப் பார்க்கிறார்கள்,” என்று தெரிவித்துள்ளார்.
கமர்ஷியல் படங்கள் நல்ல படங்களின் வருகையைக் கூட தடுமாற வைத்துவிடுகிறது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும். சுமார் 200 கோடி ரூபாய் செலவில் தயாரான 'மைதான்' படம் 50 கோடி மட்டுமே வசூலித்துள்ளது என்கிறார்கள்.