நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
மலையாள சினிமாவின் பிரபல இயக்குனர் சங்கீத் சிவன் (64) உடல்நலக் குறைவால் மும்பையில் காலமானார். மூச்சு திணறல் பிரச்னையால் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
மலையாள இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் சிவனின் மகனான சங்கீத் சிவன் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தார். தந்தை வழியில் சினிமாவில் பயணித்த இவர் வயோகம், யோதா, டாடி, நிர்ணயம், ஜானி, சினேகபூர்வம் அண்ணா உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கி உள்ளார். ஹிந்தியில் ஜோர், கிளிக், ஏக் - தி பவர் ஒன், யமலா பகலா தீவானா 2 உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். சில படங்களை தயாரித்தும், திரைக்கதையும் எழுதி உள்ளார். கடைசியாக 2019ல் பரம் என்ற வெப்சீரிஸை இயக்கினார்.
மறைந்த சங்கீத் சிவன், பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் சகோதரர் ஆவார்.
சங்கீத் சிவனின் மறைவுக்கு மலையாளம் மற்றும் பாலிவுட்டை சேர்ந்த திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.