விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி' | காஜல் அகர்வாலின் ‛தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ல் ரிலீஸ் | பெத்தி படத்திலும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் | அரசன் செட்டுக்கு வந்த பிரியங்கா மோகன் | தெலுங்கிலும் லாபக் கணக்கை ஆரம்பித்த 'கருப்பு' | ‛என் இனிய பொன் நிலாவே' பாடல் வழக்கு ; முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது : இளையராஜா மனு தள்ளுபடி | அடுத்தடுத்து இந்தியத் திரையுலகத்தை கலக்கிய 'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்கள் | விஜய் முதல்வரானதும் கடகடவென உயர்ந்த இன்ஸ்டா பாலோயர்கள் | தம்பி பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன சிரஞ்சீவி | சினிமாவில் போக்குவரத்து போலீஸ், நிஜத்தில் போக்குவரத்து அமைச்சர் |

நடிகர் தனுஷ் தனது 50வது படமான 'ராயன்' என்கிற படத்தை இயக்கி, நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து கடந்த சில மாதங்களாக இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ராயன் படத்திலிருந்து முதல் பாடல் மே 9ம் தேதியான இன்று வெளியாகும் என அறிவித்து இருந்தனர். அதன்படி ‛அடங்காத அசுரன்' என்ற பாடலை வெளியிட்டுள்ளனர். இந்த பாடலை எழுதி இருப்பதோடு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் உடன் இணைந்து பின்னணியும் பாடி இருக்கிறார் தனுஷ்.
இந்த பாடலுக்கு பிரபுதேவா நடனத்தை இயக்கி உள்ளார். 500க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் தனுஷ் உடன் இணைந்து நடனமாடியுள்ளனர். ராயன் படம் ஜூன் 13ம் தேதி திரைக்கு வருகிறது.




