மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் எண்ணிலடங்கா வெற்றி படங்களை தந்து பின்னர் தேமுதிக எனும் அரசியல் கட்சியை துவங்கி அரசியலிலும் கால்பதித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் கேப்டன் என செல்லமாக அழைக்கப்படும் விஜயகாந்த். உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த விஜயகாந்த் கடந்தாண்டு டிசம்பரில் மறைந்தார். கலை மற்றும் அரசியல் பயணத்தில் இவரின் சாதனையை பெருமைப்படுத்தும் விதமாக மத்திய அரசு இவருக்கு பத்மபூஷண் வழங்குவதாக அறிவித்திருந்தது.
கடந்த மாதம் 22ம் தேதி நடந்த பத்ம விருதுகள் நிகழ்வில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்படவில்லை. இது சர்ச்சையானது. பின்னர் இரண்டாம் கட்ட நிகழ்வில் விஜயகாந்த்திற்கு விருது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று(மே 9) டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில் மறைந்த நடிகர் விஜயகாந்த்திற்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது. அவர் சார்பில் அவரது மனைவி பிரேமலதா பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் மற்றும் மைத்துனர் சுதீஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
வைஜெயந்தி மாலா, சிரஞ்சீவிக்கு பத்மவிபூஷண்
இன்றைய நிகழ்வில் தமிழகத்தில் பிறந்து பாலிவுட் வரை சாதித்த பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலாவிற்கு(90) அவரின் கலை சேவையை பாராட்டி பத்ம விபூஷண் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
அதேப்போல் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் சிரஞ்சீவிக்கும் அவரது கலை சேவையை பாராட்டி பத்ம விபூஷண் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.