ராஷ்மிகாவின் 30வது பிறந்தநாளில் வெளியான 'மைஸா' படத்தின் அதிரடி போஸ்டர்! | 'மீசைய முறுக்கு 2' இரண்டாம் பாடல் ஏப்.8ல் வெளியாகிறது! | 'நூறு சாமி' படத்தின் டீசர் வெளியானது! | 'மிஸ்டர். எக்ஸ்' படத்திற்கு யு/ஏ சான்றிதழ் மற்றும் டிஜிட்டல்,சாட்டிலைட் உரிமை விவரங்கள்! | அதிக சம்பளம் பெறும் இசையமைப்பாளர் ஆக ஏ.ஆர். ரஹ்மான்! | ஏப்.17ல் விக்ரமின் அடுத்த பட அறிவிப்பு! | பிளாஷ்பேக்: தணிக்கைக் குழுவினரால் வெற்றியைத் தவறவிட்ட “காஞ்சித் தலைவன்” | என் அண்ணன், பாட்ஷா, டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள் | டப்பிங் படங்களை கண்டு கொள்ளாத தமிழ் ரசிகர்கள் | ஆயிரத்தில் ஒருத்தி சாரா அர்ஜுன் |

மலையாள திரையுலகில் கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு மேலாக கதாசிரியர், நடிகர், இயக்குனர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வந்தவர் கதாசிரியர் பி.பாலச்சந்திரன்(62). கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் இன்று(ஏப்., 5) காலமானார்.
மோகன்லால், மம்முட்டி நடித்த சில படங்களுக்கு கதை எழுதியுள்ள பாலச்சந்திரன், கடந்த 2016ல் துல்கர் சல்மான் நடித்த, விருதுகள் பல பெற்ற கம்மட்டிபாடம் திரைப்படத்திற்கு கதை எழுதியிருந்தார். ஒருபக்கம் கதாசிரியராக இருந்து கொண்டே, இன்னொரு பக்கம் குணச்சித்திர நடிகராகவும் தொடர்ந்து பயணித்து வந்தார் மேலும் கேரள சாகித்திய அகாடமி விருது கேரள சங்கீத நாடக அகாடமி விருது உள்ளிட்ட பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
கடைசியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு, மம்முட்டி நடிப்பில் வெளியான '1'' என்கிற படத்தில் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பாலச்சந்திரன். கம்மட்டிபாடம் படத்தில் பணியாற்றியபோது இவருடன் நெருங்கிப் பழகிய நடிகர் துல்கர் சல்மான் இவரது மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.