மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் சொல்லப்பட்டது உண்மையா? - விசாரிக்க தமிழக அரசு உத்தரவு | அந்த மூணு சர்ப்ரைஸை தயவு செய்து சொல்லாதீங்க : இளன் வேண்டுகோள் | நயன்தாராவின் ‛மண்ணாங்கட்டி' படப்பிடிப்பு நிறைவு | ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப் போகிறதா இந்தியன் 2? | தீபிகா படுகோனேவை பிரிகிறாரா ரன்வீர் சிங் : பாலிவுட்டில் பரபரப்பு | விஜய்யின் கோட் படத்தில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்? | ராஜு மகாலிங்கத்தின் புதிய வீட்டிற்கு விசிட் அடித்த ரஜினி | சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ் வைரல் கிளிக்ஸ் | பாலாவின் காதலா? டிஆர்பி கேமா? - குழம்பிய ரசிகர்கள் | முடிவுக்கு வரும் ‛அருவி' சீரியல் |
கடந்த இரண்டு வருடங்களில் புட்டபொம்மா, அரபிக்குத்து பாடல்கள் மூலம் தொடர்ந்து ரசிகர்களை வசீகரித்தாலும், நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கடந்த வருடம் தமிழில் வெளியான பீஸ்ட், தெலுங்கில் ராதே ஷ்யாம், ஆச்சார்யா மற்றும் ஹிந்தியில் சர்க்கஸ் என விதவிதமாக அவர் நடித்த படங்கள் வெளியானாலும் இந்த நான்கு படங்களும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இந்த வருட துவக்கத்தில் சல்மான்கானுடன் இந்தியில் அவர் நடித்த கிஷிகா பாய் கிஷிகி ஜான் படமும் அவருக்கு பெரிய அளவில் வெற்றியை தரவில்லை.
இந்த நிலையில் தற்போது அவர் ஒரே ஒரு ஹிந்தி படத்தில் மட்டும் நடித்து வருகிறார். பிரபல மலையாள இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் சாஹித் கபூர் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் தான் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தனது பிறந்தநாளை இதன் படபிடிப்பு தளத்தில் கொண்டாடியுள்ளார் பூஜா ஹெக்டே. இது குறித்த புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ், “பூஜா ஹெக்டேவை இந்த படத்தின் கதாநாயகியாக வரவேற்பதற்கும் அவரது பிறந்தநாளை கொண்டாடுவதற்கும் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று கூறியுள்ளார்.