கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? | ஆற்றில் குப்பையை கொட்டியதற்காக பிரபல பாடகருக்கு 25000 ரூபாய் அபராதம் | கடனை திருப்பி கேட்டதால் என் மீது புகார் : நாத்தனார் மீது பதில் வழக்கு தொடர்ந்த ஹன்சிகா | திரிஷா போன்ற அமெரிக்கா பெண் ஒருவர் என் மீது காதல் வயப்பட்டார் : நடிகர் பாலா புது தகவல் | எம்புரான் படத்திற்கு எந்த அரசியல் அழுத்தமும் தரப்படவில்லை : சுரேஷ் கோபி |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கும் கோட் படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு தற்போது விறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். அவரது இசையில் உருவான விசில் போடு என்ற பாடல் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படத்தின் இரண்டாவது பாடல் விஜய்யின் பிறந்த நாளில் வெளியாக உள்ளது.
கோட் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதாக சோசியல் மீடியாவில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது. விஜய்யுடன் ஒரு காட்சியிலாவது நடிக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டதாகவும், அதற்காகவே அவரை ஒரு காட்சியில் வெங்கட் பிரபு நடிக்க வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய்யை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இதற்கு முன்பு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படத்திலும் சிவகார்த்திகேயன் நடிப்பதாக ஆரம்பத்தில் ஒரு தகவல் வெளியாகி வந்தது. பின்னர் அது வதந்தி ஆகிவிட்டது. அதேபோல்தான் இந்த செய்தியும் இருக்குமா? இல்லையா? என்பது விரைவில் தெரியவரும்.