பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! |
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் படம் இந்தியன் 2. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். 2020ம் ஆண்டே தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்துகள் காரணமாக தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்குமிடையே மோதல் ஏற்பட்டு படம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. அதையடுத்து மீண்டும் 2022ம் ஆண்டு படப்பிடிப்பை தொடங்கப்பட்டு தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்னும் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு மட்டுமே நடைபெற வேண்டி உள்ளது.
இந்த நிலையில் தான் ஜூன் மாதம் இந்தியன் 2 திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது ஜூன் மாதம் வெளியாக வாய்ப்பில்லை. ஆகஸ்ட் மாதம் தான் இந்தியன் 2 வெளியாக வாய்ப்பு உள்ளது என்று ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் இறுதி கட்டப் பணிகளில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இருப்பதால் கால அவகாசம் அதிகம் எடுத்துக் கொள்வதாகவும், அதற்காகவே ஜூன் மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதத்திற்கு ரிலீஸ் தேதி மாற்றப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.