''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் சிதம்பரம் என்பவர் இயக்கத்தில் மஞ்சும்மேல் பாய்ஸ் என்கிற படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. கொடைக்கானலில் உள்ள புகழ்பெற்ற குணா குகையை பார்ப்பதற்காக சுற்றுலா வந்திருந்த 10 கேரள இளைஞர்களில் ஒருவர் அங்கிருந்த 100 அடிக்கும் ஆழமான பள்ளத்தில் தவறி விழுந்து விட, உடன் வந்த நண்பர்களில் ஒருவர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அந்த குழிக்குள் இறங்கி அவரை மீட்பது தான் கதை. இது கடந்த 2006ல் அங்கே நிஜமாகவே நடந்த சம்பவத்தை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டுள்ளது என படத்தின் இயக்குனர் சிதம்பரம் கூறி இருந்தார்.
2006ல் அந்த நிஜமான சம்பவத்தில் இடம்பெற்ற ரியல் மஞ்சும்மேல் பாய்ஸ் குழுவினரும் இதை உறுதிப்படுத்தி உள்ளனர். அதேசமயம் அப்படி ஒரு சம்பவம் நடைபெற்ற போது கொடைக்கானலில் இருந்த காவல் நிலையத்திற்கு சென்று அங்குள்ள அதிகாரிகளை உதவிக்காக அழைத்தபோது அங்கிருந்த போலீஸார் இவர்கள் மீதே சந்தேகப்பட்டு தாக்கியதாகவும் உதவிக்கு வர மறுத்து ஒரே ஒரு காவலரை மட்டும் முதலில் அனுப்பி வைத்ததாகவும் இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் இந்த படம் வெளியான சமயத்தில் பேட்டி கொடுத்தார்கள்.
இந்த நிலையில் தமிழக அரசின் உள்துறை செயலர் பி அமுதா, இப்படி ஒரு சம்பவம் 2006ல் நடைபெற்றதா, கொடைக்கானல் போலீஸார் இதுபோன்று சம்பந்தப்பட்ட நபர்களை தாக்கினார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளும்படி தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதி உள்ளாராம்.
நிஜமாக நடந்த நிகழ்வில் இடம் பெற்ற யாரும் இது குறித்து போலீஸில் புகார் அளிக்காவிட்டாலும் கேரளாவில் உள்ள நிலாம்பூரை சேர்ந்த ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினரும் காங்கிரஸ் தலைவர்களை ஒருவருமான சிஜூ ஆபிரகாம் என்பவர் அளித்த புகாரின் பேரில் இந்த விசாரணையை துவங்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாம்.