செப்டம்பர் 19ல் 4 படங்கள் ரிலீஸ் | மஞ்சு மனோஜுக்குத் திருப்பம் தந்த 'மிராய்' | தாய்மை அடைந்த கத்ரினா கைப்: அடுத்த மாதம் 'டெலிவரி' | 'லோகா' வெற்றி: இயக்குனர் ஜீத்து ஜோசப் எச்சரிக்கை | ஓடிடி : முதலிடத்தில் 'சாயரா', இரண்டாமிடத்தில் 'கூலி' | பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் |
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் நடந்த 2005ல் வெளியான படம் அந்நியன். லஞ்சத்திற்கு எதிரான மற்றும் தனி மனித ஒழுக்கம் குறித்து குரல் கொடுக்கும் விதமாக உருவாகி இருந்த இந்த படம் வரவேற்பை பெற்றது. மூன்று நபர்களாக வித்தியாசம் காட்டி நடித்திருந்த விக்ரமின் நடிப்பும், ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்களும், ஷங்கரின் விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பும் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய தூண்களாக அமைந்தன. அது மட்டுமல்ல தெலுங்கில் அபராஜிதடு என்கிற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி தமிழைப் போலவே தெலுங்கிலும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் சமீபகாலமாக விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் விக்ரம் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக இந்த அபராஜிதடு படம் வரும் மே 17ஆம் தேதி தெலுங்கில் ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. இந்த படத்தை தயாரித்த பிரபல தயாரிப்பாளரான ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தான் தெலுங்கில் இந்தப் படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார்.