இத்தனை வயதிலும் பிகினியில் அசத்தும் ஸ்ரேயா | நான் உயிர் உள்ள மனுஷி - சாய் பல்லவி | மீண்டும் புத்துயிர் பெறும் 'சங்கமித்ரா' | சினிமாவில் வெற்றி தான் முக்கியம் : மணிகண்டன் | நீக் படத்திற்கு எஸ்.ஜே.சூர்யா விமர்சனம் : தனுஷ் நன்றி | முதல் 3 நாட்களில் 12 கோடி வசூலித்த கங்கனாவின் 'எமர்ஜென்சி' | 2025ல் ராஷ்மிகாவின் முதல் படம் பிப்ரவரி 14ல் வெளியாகிறது! | பிரேமலு 2ம் பாகம் அப்டேட் | காதலியை மணந்தார் இயக்குனர் அஜய் ஞானமுத்து | கவுதம் மேனன் இயக்கத்தில் ரவி மோகன் |
வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தில் நடித்து வரும் விஜய், இதையடுத்து எச்.வினோத் இயக்கும் தனது 69வது படத்தில் நடிக்கப் போகிறார். அந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. விஜய்யின் எதிர்கால அரசியல் கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கக் கூடிய வகையில் இப்படத்தின் கதைக்களம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
மேலும், தனது 69வது படத்தில் நடித்து முடித்ததும் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியல் களத்தில் குதிக்கப் போவதாக சில மாதங்களுக்கு முன்பே அறிவித்த விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது கட்சியின் பெயரையும் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் வருகிற ஜூன் 22 ஆம் தேதி தனது பிறந்தநாளை ஒட்டி மதுரையில் தனது கட்சி சார்பில் முதல் பிரமாண்டமான மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார் விஜய். இந்த மாநாட்டுக்கு தமிழகம் முழுக்க இருந்து விஜய்யின் ஒட்டுமொத்த ரசிகர்களும் திரண்டு வந்து கலந்து கொள்கிறார்களாம்.