அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
சின்னத்திரை நடிகரான வெங்கட், தமிழின் முன்னணி தொலைக்காட்சிகளில் தொடர்ந்து பல ஹிட் சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ரோஜா தொடரிலிருந்து திடீரென விலகினார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், தொடரிலிருந்து விலகியது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய வெங்கட், 'ரோஜாவில் என்னுடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் தரவில்லை. புரோமோக்களில் முகத்தை கூட காட்டுவதில்லை. ரோஜா அஸ்வினை விட பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவை தான் ரசிகர்களுக்கு தெரியும்'என கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள ரோஜா சீரியல் குழுவினர், 'பொதுவாக புரோமோக்களில் லீட் கேரக்டர்ஸை காட்டுவது தான் வழக்கம். அதை தான் ரோஜா தொடரிலும் செய்தோம். மேலும், ஆரம்பத்திலேயே அஸ்வின் கேரக்டர் லீட் ரோல் இல்லை என்று சொல்லிதான் வெங்கட்டை கமிட் செய்தோம். கொரோனா லாக்டவுனுக்கு பிறகு அவர் ரெஸ்ட் தேவை என்று கூறினார். எனினும் அவருக்காக தேதிகளை ஒதுக்கினோம்' என தெரிவித்துள்ளனர்.