'கேரள ஸ்டோரி 2' படத்திற்கு கோர்ட் நோட்டீஸ் | 2026ன் 3வது நேரடி ஓடிடி ரிலீஸ் 'லக்கி தி சூப்பர்ஸ்டார்' | ஷங்கரின் ‛வேள்பாரி' படத்தில் தனுஷ் நடிக்கிறாரா...? | 'கைதி 2' விரைவில் டீசருடன் அறிவிப்பு | பெங்களூருவின் புகழ் பெற்ற ஊர்வசி தியேட்டர் நிரந்தர மூடல் | காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் |

திரை பிரபலங்களுக்கு பேன்ஸ், பேன்ஸ் க்ளப் என்ற பெயரில் ரசிகர்கள் கூட்டம் குவிவது வழக்கம். இந்த கூட்டம் ஆர்மியாக மாறியதெல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சி வந்த பிறகு தான். பிக்பாஸ் முதல் சீசனில் கூட ஓவியா ஓரளவு பிரபலமான பிறகு தான் அவருக்காக ஆர்மி தொடங்கப்பட்டது. ஆனால் பிக்பாஸ் பவனி ரெட்டிக்கு ஒரே நாளில் ஆர்மியை தொடங்கிவிட்டார்கள் நமது நெட்டீசன்கள். 18 போட்டியாளர்களை கொண்ட பிக்பாஸ் சீசன் 5-ல் பவனி ரெட்டிக்கு மட்டும் தான் தற்போது ஆர்மி தொடங்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் துவக்க நிகழ்ச்சியில் பேசிய பவனி ரெட்டி தனது கணவரது தற்கொலை குறித்து உருக்கமாக பேசியிருந்தார். மேலும், தான் பிக்பாஸ் வருவதே மற்றவர்கள் தன்னை பற்றி தெரிந்து கொள்ளத்தான் என்றும், எப்போதும் இண்ட்ரோவெர்ட்டாக இருக்கும் நான் இந்த முறை வெளிப்படையாக இருக்க போவதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் அவருக்காக ஆர்மி தொடங்கப்பட்டு சமூக வலைதளங்களில் அதிக அளவில் மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகிறது.




