'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

கொரோனா காலத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டதாலும், பின்னர் 50 சதவீத இருக்கைககளுக்கு மட்டுமே அனுமதி என்பதாலும் ஓடிடி தளங்களில் புதிய படங்களை நேரடியாக வெளியிட்டார்கள். 2020ம் ஆண்டில் 20, 2021ல் 40, 2022ல் 25க்கும் மேற்பட்ட படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளியாகின. கடந்த மூன்று ஆண்டுகளில் அது 10க்கும் குறைவான எண்ணிக்கையில் வந்தது.
இந்த 2026ம் ஆண்டில் முதன் முதலில் வெளியான தமிழ்ப் படமே ஓடிடி தளத்தில் தான் வெளியானது. சரியான தியேட்டர்கள் தரப்படவில்லை என்று குற்றம் சாட்டி 'சல்லியர்கள்' படத்தை ஜனவரி 1ம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட்டார்கள். அதன்பின் ஜனவரி 13ம் தேதி சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய 'அனந்தா' படமும் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஆரம்பமான 'லக்கி தி சூப்பர்ஸ்டார்' படத்தைப் பற்றி அதன்பின் எந்தத் தகவலும் இல்லாமல் போனது. சமீபத்தில் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளதாக அறிவித்தார்கள். “நாளை, சக்கர வியூகம்' உள்ளிட்ட படங்களை இயக்கியவரும், சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தவரும் 'ஆபீஸ்' சீரியலில் விஸ்வநாதன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான உதய் மகேஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
ஜிவி பிரகாஷ்குமார், 'வித் லவ்' படக் கதாநாயகி அனஸ்வரா ராஜன், தேவதர்ஷினி, கோவை சரளா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் கே பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இன்று இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி உள்ளது. தமிழில் தயாராகி உள்ள இந்தப் படம் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.




