அட்லியின் 'ராக்கா' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் ஷாருக்கான்! | சிவராஜ்குமாரை இயக்கும் எங்கேயும் எப்போதும் சரவணன் | விக்னேஷ் ராஜா நீங்கள் ஜீனியஸ் : தனுஷ் பாராட்டு | தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் ஜோவிகா! | 4வது 100 கோடியை தொடுமா எல்ஐகே | 1 கோடி இழப்பீடு கேட்டு தமன்னா தொடர்ந்த வழக்கு மீண்டும் தள்ளுபடி | 'அரசன்' பார்த்து அதிர்ச்சி அடைந்த தனுஷ் | முடிவுக்கு வரும் 'துரந்தர் 2' வசூல் | 'ஜனநாயகன்' லீக்: 3 முக்கிய குற்றவாளிகள் கைது | ஆங்கிலத்திலும் வெளியாகும் என்னுடைய முதல் படம் 'டாக்ஸிக்' தான் ; நடிகர் யஷ் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடித்து 2019ல் வெளியான படம் 'கைதி'. ஒரு மாறுபட்ட படமாக அமைந்து ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் பெரிதும் பேசப்பட்டது. அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என கடந்த சில வருடங்களாகவே ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.
ஆனால், அடுத்தடுத்து விஜய், கமல்ஹாசன், ரஜினிகாந்த் என முன்னணி நடிகர்களுடன் பயணித்தார் லோகேஷ். சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள படத்தை அவர் இயக்கும் அறிவிப்பும் வெளிவந்தது. 'கைதி 2' அவ்வளவுதானா என ரசிகர்கள் கேட்க ஆரம்பித்தார்கள்.
அத்தனை கேள்விகளுக்கும் பதிலளிக்கும் விதத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து 'கைதி 2' படம் நிச்சயம் வரும் என்று அறிவித்தார் லோகேஷ். அல்லு அர்ஜுன் படத்தை முடித்த பிறகு 'கைதி 2' படத்தை அவர் ஆரம்பிக்க உள்ளார்.
இதனிடையே, 'கைதி' படத்தில் கார்த்தியின் கதாபாத்திரமான 'டில்லி' என்ற பெயரில் ஒரு டீசருக்கு தயாரிப்பு நிறுவனம் சென்சார் சான்றிதழ் வாங்கியுள்ளது. அது 'கைதி 2' படத்திற்காக இருக்கலாம் என்றும், விரைவில் அறிவிப்புடன் கூடிய அந்த டீசர் வெளியாகலாம் என்றும் தெரிகிறது.