தனுஷ் 56... தமிழரசன் பச்சமுத்து : அப்போ மாரி செல்வராஜ்? | தாய் கிழவி : சிங்கம் புலி நடிப்பை பாராட்டிய கமல் | தெலுங்கு, தமிழ் கலாசாரத்துடன் இணைந்திருக்கிறேன்! ஜான்வி கபூர் | போர் முழக்கம் : வடிவேலுவின் புதிய படம் | கமல் - ரஜினி இணையும் படம் குறித்து அனிருத் வெளியிட்ட அப்டேட்! | விஜய் சேதுபதியை இயக்கும் அஜித் பட இயக்குனர்! | போர் சூழல் : டாக்சிக் ரிலீஸ் ஜூன் 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு | ‛காற்றின் மொழி' இசையில்.... : ‛மெலோடி கிங்' வித்யாசாகர் பாடல்களை மறக்க முடியுமா? | பிளாஷ்பேக்: ராஜாஜி பாராட்டிய சிவாஜிகணேசன் | சிகரெட், மதுவை தொட்டதில்லை: சதீஷ் பெருமிதம் |

நடிகை ஷகிலாவின் வளர்ப்பு மகளான மிலா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக செய்திகள் வெளியாகி வந்தது. இதற்கிடையில் மிலாவும் பிக்பாஸ் வீட்டினுள் இருக்கும் கேமராவை முத்தம் கொடுப்பது போல் போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவர் கண்டிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்பார் என பலரும் கருதி வந்த நிலையில் அவர் விலக்கப்பட்டுள்ளார். பிக்பாஸில் கலந்து கொள்ளாதது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய மிலா அதை பற்றி எதுவும் கேட்காதீர்கள் என அப்செட்டாக பதிலளித்திருந்தார்.
இந்நிலையில் அவர் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது. அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிகள் படி இந்த சீசனில் ஒரு திருநங்கை மட்டுமே கலந்து கொள்ள முடியும். அந்த வகையில் நமிதா மாரிமுத்து மிலாவை விட பிரபலமானவர். மேலும் 2014 ஆண்டு திருநங்கைகளுக்கான மிஸ் சென்னை போட்டியில் டைட்டில் வென்றுள்ளார். மேலும் 2018-ல் மிஸ் இந்தியா ஆகிய பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காரணங்களுக்காக தான் மிலா விலக்ப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகிறது. இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இடையில் மிலா என்ட்ரி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.




