தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
டிவி சீரியல்களில் அதிக ரசிகர்களை கொண்ட தொடர்களில் ஒன்று 'சந்திரலேகா'. திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடர் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே வேறு எந்த சீரியலும் தொடாத அளவிற்கு 2000 எபிசோடுகளை கடந்து இமாலய சாதனையும் படைத்துள்ளது. தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடர் முடிவுக்கு வருகிறது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு வாய்ப்பே இல்லை என்பது போல் கதையின் நாயகிகள் இண்ஸ்டாவில் போஸ்ட் ஒன்றை செய்துள்ளனர்.
சந்திரலேகா தொடரில் ஸ்வேதா பண்டேகர், நாகஸ்ரீ, சந்தியா மற்றும் ராணி ஆகிய நடிகைகள் தான் மெயின் கதாபாத்திரங்களில் நடித்து கதையை நகர்த்தி வருகின்றனர். இந்நிலையில் சந்திரலேகா தொடர் 2000 எபிசோடுகளை கடந்துள்ளதை கொண்டாடும் வகையில் நால்வரும் சேர்ந்து புகைப்படத்தை வெளியிட்டு கேப்ஷனில் இன்னும் இருக்கிறது என பதிவிட்டுள்ளனர். ஒருபுறம் ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சி தான் என்றாலும் கதையை எப்பதான் முடிப்பீங்க என கேள்விகளும் கேட்டு வருகின்றனர்.