மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா |
ஜீ தமிழ் 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று திரையில் அறிமுகமானவர் அர்ச்சனா குமார். அதனை தொடர்ந்து விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் நடிகையாக அறிமுகாமான அர்ச்சனா தற்போது யூடியூப் வெப் சீரியஸில் ஹீரோயினாகவும் கமிட்டாகியுள்ளார். இதழும் இதழும் இணையட்டுமே என்கிற அந்த தொடரின் முதல் எபிசோடு சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவான 'காமெடி ராஜா கலக்கல் ராணி' நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வரும் அர்ச்சனா அந்த நிகழ்ச்சிக்காக மைக்கேல் ஜாக்சன் போல் கெட்டப் போட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இன்ஸாடாகிராமில் வைரலாகி வருகின்றன. இயல்பிலேயே நல்ல நடனமாடும் திறன் கொண்ட அர்ச்சனா காமெடி ரியாலிட்டி ஷோவில் மைக்கேல் ஜாக்சன் கெட்டப்பில் என்ன செய்ய போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.