கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
தொலைக்காட்சி தொடர்களில் பிஸியாக வலம் வரும் நடிகை செந்தில்குமாரி வெள்ளித்திரையில் விஷாலுக்கு டப்பிங் கொடுத்த சுவாரசியமான தகவல் தற்போது இணையத்தில் கசிந்து பரவி வருகிறது.
பசங்க படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான செந்தில்குமாரி களவாணி, கடைக்குட்டி சிங்கம், சுல்தான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரையில் கனா காணும் காலங்கள், சரவனன் மீனாட்சி ஆகிய தொடர்களில் நடித்து புகழ் பெற்ற அவர், தற்போது பாரதி கண்ணம்மா, வானத்தைப் போல ஆகிய தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் பிஸியாக நடித்து வருகிறார். சிறந்த டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அறியப்படும் செந்தில்குமாரியின் குரல் கிராமத்து பெண் கதாபாத்திரங்களுக்கு கட்சிதமாக பொருந்தும். அந்த வகையில் 'அவன் இவன்' படத்தில் பெண் வேடம் போட்டு திருடப்போகும் விஷாலுக்கு செந்தில்குமாரி தான் டப்பிங் பேசியுள்ளார். அந்த காட்சியில் காமெடியாகவும் எதார்த்தமாகவும் பேசிய செந்தில்குமாரியின் குரல் காட்சிக்கு வலுசேர்த்தது என்றே சொல்லாலாம். இந்த சுவாரசியமான தகவல் தற்போது வெளியானதையடுத்து பலரும் அவன் இவன் படத்தின் அந்த காட்சியை ஆச்சரியத்துடன் தேடி பார்த்து வருகின்றனர்.