நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளுக்கு இணையாக கலர்ஸ் தமிழ் சேனலும் ரசிகர்களை கவரும் சுவாரசியமான கதையம்சம் கொண்ட சீரியல்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் ஜீவா, ஸ்ரீதா சிவதாஸ் நடிப்பில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் எங்க வீட்டு மீனாட்சி தொடர் பார்வையாளர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த தொடருக்கு கூடுதல் பலமாக பட்டிமன்றம் மற்றும் சினிமாக்களில் சிரிப்பு சரவெடியாக வலம் பேராசிரியர் ஞானசம்பந்தனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அவர் இந்த தொடரில் சிதம்பரம் (ஜீவா) படிக்கும் கல்லூரியின் முதல்வராக நடிக்கிறார். நாயகி மீனாட்சி (ஸ்ரீதா சிவதாஸ்) நாயகனுக்கு பாடம் எடுக்கும் பேராசிரியராக நடிக்கிறார். எங்க வீட்டு மீனாட்சி தொடரின் புரோமோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடர் வரும் அக்டோபர் 18 ஆம் தேதி தொடங்கி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.