சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
நடிகை ஜெனிபருக்கு அண்மையில் வளைக்காப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஜெனிபர் தான் முதன் முதலில் திரையில் டான்ஸராக அறிமுகமான பாடலை போட்டு அதற்கு செமையாக குத்தாட்டம் போட்டுள்ளார்.
வெள்ளித்திரையில் டான்ஸராக அறிமுகமான ஜெனிபர் சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்தார். அதன்பின் தொடர்ந்து சரிவர வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் சினிமாவை விட்டு ஒதுங்கிய அவர் சமீபத்தில் சீரியலில் அறிமுகமாகி கலக்கி வந்தார். அந்த வகையில் ஜெனிபருக்கு பெரிய அளவில் புகழையும் பிரபலத்தையும் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் பெற்று தந்தது. அந்த தொடரில் ஜெனிபர் நடித்த ராதிகா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் காரணத்தால் ஜெனிபர் பாக்கியலெட்சுமி தொடரை விட்டு விலகினார். ஜெனிபருக்கு அண்மையில் வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. அந்நிகழ்ச்சியின் போது 18 வருடங்களுக்கு முன் முதன் முதலாக திரையில் அறிமுகமான பார்த்திபன் கனவு படத்தின் பாடலுக்கு செமையான குத்தாட்டம் ஒன்றை போட்டுள்ளார். இண்ஸ்டாவில் வைரலாகி வரும் அந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் ஜெனிபருக்கு நல்ல படியாக குழந்தை பிறக்க தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.