நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பிக்பாஸ் போட்டியாளரான அபிஷேக்கின் முன்னாள் மனைவி தீபா தங்களது விவாகரத்து குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தொடங்கி மூன்று நாட்கள் முடிந்துள்ள நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களது வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சினிமா விமர்சகரான அபிஷேக் தனது அம்மா பற்றி நினைவு கூறும் போது அவரது விவாகரத்து குறித்தும் பேசியிருந்தார்.
இந்நிலையில் அபிஷேக் தேவையில்லாமல் பழைய விஷயங்களை கிளறுவதாக அவரது முன்னாள் மனைவி தீபா நடராஜன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், 'அபிஷேக்கை விவாகரத்து செய்தது என் தனிப்பட்ட விருப்பம். அதற்கான விளைவுகளை நான் சந்தித்து வருகிறேன். சிலர் பழைய விஷயங்களை கிளறுவது நம்முடைய ஒருநாள் அல்லது வாரத்தையே வீணாக்குகிறது' என அதில் கூறியிருந்தார். மேலும் மற்றொரு பதிவில், 'திருமணமான புதிதில் அபிஷேக்குடன் சேர்ந்து பேட்டியளித்திருந்தேன். ஆனால், விவாகரத்திற்கு பிறகு தான் அது ட்ரெண்டாகிறது. அதை நீக்கும்படி மீடியாவிடம் கேட்டேன். ஆனால், அவர்கள் செய்யவில்லை' எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.