'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
இயக்குனர் இமயம் என்று திரையுலகம் மற்றும் ரசிகர்களால் அழைக்கப்படும் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி. ‛தாஜ்மஹால்' என்கிற படத்தில் மூலம் நடிகராக அறிமுகமான மனோஜ் ஒரு ஹீரோவாக பெரிய அளவில் ஜொலிக்க முடியாமல் போனார். அதே சமயம் சமீப காலமாக அடுத்து ஒரு படத்தை டைரக்ஷன் செய்யும் முயற்சியில் அவர் இறங்கி இருந்தார். இந்த நிலையில் 48 வயதேயான மனோஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். இது திரையுலகிலும் ரசிகர்களிடமும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பாரதிராஜாவின் நெருங்கிய நண்பரும் இசையமைப்பாளருமான இளையராஜா இந்த முறை திருவண்ணாமலைக்கு வழிபட சென்றபோது அங்கே மனோஜ் பாரதியின் ஆத்மா சாந்தி அடைவதற்காக மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டுள்ளார். பாரதிராஜாவை போல இளையராஜாவும் கடந்த வருடம் தனது மகள் பவதாரணியை இளம் வயதிலேயே பறிகொடுத்த துயரத்தை அனுபவித்தவர். அதனால் ஒரு நண்பராக மட்டுமல்ல, ஒரு தந்தையாகவும் பாரதிராஜாவின் இந்த வலியை இளையராஜா மிகவும் நெருக்கமாக உணர்ந்து இருப்பவர். அதனாலேயே மனோஜ் பாரதிக்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்துள்ளார் இளையராஜா.