சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு |
வெளிநாட்டு சேனல்களில் புகழ்பெற்ற சர்வைவர் நிகழ்ச்சி தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜூன் நடத்தி வருகிறார். இந்த போட்டியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதன் படப்பிடிப்புகள் தென்னாப்பிரிக்காவில் உள்ள தீவு ஒன்றில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் இருந்து பாடகி லேடி காஷ் தானாகவே வெளியேறி விட்டார். தற்போது அவர் சர்வைவர் நிகழ்ச்சி குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வீடியோவும் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: சர்வைவர் நிகழ்ச்சியில் மூன்று போட்டியாளர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டனர். கோவிட் பாசிடிவ்வாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. அதைத் தொடர்ந்து பலருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனது. அவர்களுக்கு கோவிட் டெஸ்ட் எடுக்க நிகழ்ச்சி நடத்துபவர்கள் முன்வரவில்லை. அர்ஜுன் கேட்டுக் கொண்ட பிறகே டெஸ்ட் எடுக்கப்பட்டது. எனக்கு நெகட்டிவ் என வந்தது. எங்கள் உடல்நிலை மற்றும் உயிர் பற்றி கவலை ஏற்பட்டதால், மிகவும் கெஞ்சி கேட்டதால், மூன்று நாட்களுக்கு பிறகு குடும்பத்தினருடன் பேச எங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பெரும்பாலான சமயங்களில் நாங்கள் தனிமையில் தான் இருந்துள்ளோம். அது எங்களின் உடல்நிலை மற்றும் மனநிலையை மிகவும் பாதித்தது.
டெஸ்ட் எடுக்கப்பட்டவர்களில் மூன்று பேருக்கு பாசிட்டிவ். மற்றவர்களுக்கு நெகடிவ் என வந்து விட்டதால் அவர்கள் தொடர்ந்து விளையாட்டில் பங்கேற்கலாம் என்றார்கள். எனக்கு கோவிட் பாசிடிவ் இல்லை என்பதை காரணமாக கூறி போட்டி நடத்துபவர்கள் ஓய்வெடுக்க அனுமதி அளிக்க மறுத்து விட்டனர். அதனால் உடனடியாக போட்டியில் இருந்து வெளியேறி, வீட்டிற்கு வர முடிவு செய்தேன்.
48 நாட்களாக போட்டியில் பங்கேற்று 8வது இடத்திற்கு முன்னேறி வந்துள்ளேன். உயிருக்கு ஆபத்தான நோய் தொற்று, எனது தலையில் ஏற்பட்ட காயம் என எதையும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. தலையில் ஏற்பட்ட காயத்தில் மருத்துவ பரிசோதனை கூட செய்யப்படவில்லை. மிகுந்த கனத்த இதயத்துடன், ஏமாற்றமான மனநிலையுடன் தான் எனது விளையாட்டு பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டேன். என்னால் என் குடும்பத்தினருடன் கூட பேச முடியவில்லை. எனது உடல்நிலை, மனநிலை மற்றும் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு தான் நான் திரும்பி விட்டேன்.
நான் திரும்பி வந்த செலவை கூட போட்டி நடத்துபவர்கள் ஏற்கவில்லை. எனக்கு சேர வேண்டிய பணத்தை கொடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிறைய பணம் வீணடிக்கப்பட்டதால் சில நாட்கள் போட்டியை நிறுத்திக் கூட வைத்திருந்தனர். கோவிட் தொற்று காலத்தில் நாங்கள் எங்கள் உயிர் பற்றி கவலைப்படுகிறோம். ஆனால் போட்டி நடத்துபவர்களின் ஒரே கவலை பணம் பற்றி தான். மீதமுள்ள 20 எபிசோட்களை குறுகிய காலத்திற்குள் எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளனர், என்றார்.