சேதுராஜன் ஐபிஎஸ் : மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் பிரபுதேவா | மீண்டும் ஒரு சர்வைவல் திரில்லரில் நடிக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரின் அரசியல் படத்தில் கைகோர்த்த நிவின்பாலி | ஹன்சிகா மீது பதியப்பட்ட எப்ஐஆரை தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இளையராஜா இசையில் உருவாகும் ஈழத்தமிழ் படம் | வெற்றிமாறன் படக் கம்பெனியை மூடியது ஏன் | கூலியில் நடித்தது மிஸ்டேக் என சொன்னாரா அமீர்கான் | ரயிலில் இருந்து குதித்த நடிகை படுகாயம்: ஆஸ்பத்திரியில் அனுமதி | பெப்சி, தயாரிப்பாளர் சங்கம் சமரசம் | பிளாஷ்பேக் : விஜய்க்கு 6 வயது... ஷோபாவை 2வது முறை திருமணம் செய்த எஸ்.ஏ.சந்திரசேகர் |
பிரபலங்களின் படத்தை பயன்படுத்தி, தங்கள் தயாரிப்பு பொருட்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்வது பல நிறுவனங்களின் உத்தியாக உள்ளது. இதற்கு அவர்களிடம் ஒப்புதல் பெறாமல், விளம்பரம் செய்வது சட்டப்பூர்வமாக குற்றமாகும்.
அந்த வகையில், பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், டில்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், தனது அனுமதியின்றி மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள், ஏஐ புகைப்படங்கள் பல்வேறு வலைதளங்களில் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், தனது புகைப்படங்களை தவறாக சித்தரித்து, வணிக ரீதியில் சில நிறுவனங்கள் பயன்படுத்துவதாகவும், இதற்கு தடை விதிக்கவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி தேஜாஸ் கரியா, ''கூகுள் நிறுவனத்திடம் சம்பந்தப்பட்ட லிங்குகளை அகற்றச் சொல்லலாம். அனுமதியின்றி புகைப்படங்களைப் பயன்படுத்திய வலைதளங்கள், நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை பகிர வேண்டும்'' எனத் தெரிவித்தார்.
மேலும், அபிஷேக் பச்சனின் புகைப்படங்களை பயன்படுத்த தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்த நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 15ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
நேற்று, (செப்.,9) பாலிவுட் நடிகையும், அபிஷேக் பச்சனின் மனைவியுமான ஐஸ்வர்யா ராய், இதே கோரிக்கையுடன் டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அந்த வழக்கும் இதே ஜனவரி 15ம் தேதியில் விசாரணைக்கு வருகிறது.