இளையராஜாவிற்கு பாராட்டு விழா : முதல்வர், ரஜினி, கமல் பங்கேற்பு | நான் சரியான வாழ்க்கை துணையாக மாற முயற்சிக்கிறேன் : தமன்னா | கருவிலே உயிர் உருவாகும்போது உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது : ஜாய் கிரிசில்டா பதிவு | ‛‛நான் தான் சிஎம்'' : பார்த்திபன் வெளியிட்ட அறிவிப்பு | சேதுராஜன் ஐபிஎஸ் : மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் பிரபுதேவா | மீண்டும் ஒரு சர்வைவல் திரில்லரில் நடிக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரின் அரசியல் படத்தில் கைகோர்த்த நிவின்பாலி | ஹன்சிகா மீது பதியப்பட்ட எப்ஐஆரை தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இளையராஜா இசையில் உருவாகும் ஈழத்தமிழ் படம் | வெற்றிமாறன் படக் கம்பெனியை மூடியது ஏன் |
பாலிவுட் சினிமாவின் நட்சத்திர ஜோடியான ரன்வீர் சிங், தீபிகா படுகோனே ஆகிய இருவரும் கடந்த 2018ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வந்த தீபிகா படுகோனே, கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் எட்டாம் தேதி ஒரு மகளைப் பெற்றெடுத்தார். அந்த மகளுக்கு துவா என்று பெயர் வைத்தார்கள். இப்போது வரை தங்களது மகளின் முகத்தை அவர்கள் ரசிகர்களுக்கு காட்டவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கள் மகளின் முதலாம் ஆண்டு பிறந்தநாளை அவர்கள் கொண்டாடி உள்ளார்கள். மகளின் இந்த பிறந்த நாளுக்காக தானே கேக் தயாரித்துள்ளார் தீபிகா படுகோனே. அதையடுத்து மகளுக்கு தாங்கள் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை அவர்கள் வெளியிட்டதை அடுத்து ரசிகர்கள் வாழ்ந்து தெரிவித்து கொள்கிறார்கள். என்றாலும் இந்த பிறந்தநாளில் வெளியிட்டுள்ள புகைப்படங்களிலும் அவர்கள் தங்களது மகளின் முகத்தை காட்டவில்லை.