ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
ஹாலிவுட்டின் கவர்ச்சி மற்றும் ஆக்ஷன் நடிகையும் பாடகியுமான ஜெனிபர் லோபசுக்கு வயது 52. ஏற்கெனவே 3 முறை திருமணம் செய்து விவாகரத்து செய்தவர். தற்போது தன்னை விட 3 வயது இளையவரான ஹாலிவுட் நடிகர் பென் அப்லெக்கை மணந்துள்ளார். அப்லெக்கிற்கு இது இரண்டாவது திருமணம். 20 வருடங்களுக்கு முன்பு அப்லெக்கை காதலித்து, அவருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்த ஜெனிபர் பின்பு அதனை ரத்து செய்தார். இப்போது மீண்டும் அவருடன் இணைந்திருக்கிறார்.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் கடந்த 17ம் தேதி இந்த திருமணம் நடந்தது. இது குறித்து ஜெனிபர் லோபஸ் கூறியிருப்பதாவது: காதல் அழகானது. அன்பு கனிவானது. அது அன்பை பொறுமையாக மாற்றுகிறது. இருபது வருடங்கள் பொறுமையாக இருக்கும். சரியாக நாங்கள் விரும்பியது, 5 அற்புதமான குழந்தைகளைக் கொண்ட ஒரு புதிய அற்புதமான குடும்பம் மற்றும் நாங்கள் எதிர்நோக்குவதற்கு அதிக காரணங்களைக் கொண்டிருக்காத வாழ்க்கையைப் பெற்றதற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். என்று தெரிவித்துள்ளார்.