சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

'நண்பன்' படக் கதாநாயகி இலியானா, தற்போது சினிமாவில் பிஸியாக இல்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிஸியாகத்தான் இருக்கிறார். அடிக்கடி அவருடைய இன்ஸ்டாவில் விதவிதமான புகைப்படங்களைப் பகிர்வது வழக்கம்.
சமீபத்தில் தனது நண்பர்கள், தோழிகள் படை சூழ பீச்சில் ஒரு கொண்டாட்டத்தை நடத்தியுள்ளார். அந்தப் புகைப்படங்களை கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பதிவிட்டிருந்தார். அதில் நடிகை காத்ரினா கைப்பும் இருந்தார். பீச்சிலும், பீச் மணலிலும் பிகினி அணிந்த சக தோழிகளுடன் உற்சாகமான புகைப்படங்களையும் போட்டிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு ஒரு அட்டகாசமான பிகினி செல்பி புகைப்படத்தைப் பகிர்ந்து, “விடுமுறைக்காக பீச்சுக்குச் சென்றால் பிகினி செல்பி எடுக்காமல் இருக்க முடியுமா,” எனக் கேட்டுள்ளார். செல்பி எடுத்த கேமரா கோணம் அழகா, இல்லை அந்த வண்ண பிகினி ஆடையில் இலியானா அழகா என போட்டியே வைக்கலாம்.




