சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

ஷங்கர் இயக்கத்தில், விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா, சத்யராஜ், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடித்த 'நண்பன்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் இலியானா. தெலுங்கில் 'தேவதாசு' படம் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர். தமிழில் 'கேடி' படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்தார். ஹிந்தியில் 'பர்பி' படம் மூலம் அறிமுகமாகி அங்கும் சில படங்களில் நடித்தார்.
கடந்த சில வருடங்களாக அவரைப் பற்றிய காதல், திருமண கிசுகிசுக்கள் அடிக்கடி வெளிவந்தன. இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். மைக்கேல் டோலன் என்பவரை கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டார். நேற்று இரவு தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக குழந்தையின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
“அறிமுகப்படுத்துகிறோம்… கோ பீனிக்ஸ் டோலன்… ஆகஸ்ட் 1, 2023 அன்று பிறந்தார்… எங்கள் அன்பான மகனை உலகிற்கு வரவேற்பதில் எவ்வளவு மகிழ்ச்சியில் உள்ளோம் என்பதைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.. மனம் நிரம்பி வழிகிறது…,” என தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இலியானாவுக்கு திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.