புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா, சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த் நடிப்பில் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியான படம் ‛வாரிசு'. ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்த படம் ரூ.300 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த படத்தின் கேரள உரிமை ரூ.7.5 கோடிக்கு விற்கப்பட்டதாகவும், ஆனால் ரூ.4 கோடிக்கு மட்டுமே வரி செலுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக நடிகர் விஜய்க்கு வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் அண்ணா சரவணன் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
அதில், ‛‛சமூக அக்கறையோடு தாங்கள்(நடிகர் விஜய்) செய்து வரும் பல நல்ல காரியங்கள் பாராட்டுக்குரியவை. குறிப்பாக தொகுதி வாரியாக 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களை அழைத்து பாராட்டி, பரிசளித்தது, தேர்தலில் ஓட்டு போட காசு வாங்க கூடாது என அவர்கள் முன் நீங்கள் உரையாற்றியது ஒரு அரசியல் இயக்கத்தின் பொறுப்பாளர் என்கிற முறையில் தங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்.
கடந்த ஜனவரியில் தங்கள் நடிப்பில் வெளியான ‛வாரிசு' படத்தின் கேரள உரிமை ரூ.7.50 கோடிக்கு விற்பனையான நிலையில் தங்களின் தயாரிப்பாளர் உண்மையை மறைத்து ரூ.4 கோடிக்கு விற்றதாக ஆவணங்கள் தயாரித்து, ரூ.4 கோடிக்கு மட்டுமே ஜிஎஸ்டி செலுத்தி உள்ளார். இதன்மூலம் கிட்டத்தட்ட 45 சதவீதம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அறிகிறேன்.
வாரிசு படத்தின் மொத்தம் வியாபாரம் ரூ.300 கோடி அளவில் இருக்கலாம் என நம்பப்படும் நிலையில் தயாரிப்பாளர், அரசுக்கு எவ்வளவு வரி செலுத்தினார் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.
வருமானம் ஈட்டுபவர்கள் செலுத்தும் வரிப்பணத்தில் தான் ஏழைகளுக்கான நலத் திட்டங்களை அரசு செயல்படுத்த முடிகிறது என்பதை தாங்கள் அறிவீர்கள். எனவே சமூக அக்கறையோடு செயல்பட்டு வரும் நீங்கள், தங்களின் தயாரிப்பாளர்களுக்கு தக்க அறிவுரை வழங்கி, உரிய வரியை அவர்கள் செலுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும் என தங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.