டியூட் படத்தின் டிஜிட்டல் உரிமை இத்தனை கோடியா? | நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி : போட்டோ வைரல் | ‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? |
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, ஜாக்கி ஷெராப், சுனில், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‛ஜெயிலர்'. சிறப்பு வேடத்தில் மோகன்லால், சிவராஜ் குமார் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். ஆக., 10ல் படம் திரைக்கு வர உள்ளது. ஏற்கனவே இந்த படத்திலிருந்து ‛காவாலா, ஹூக்கும், ஜூஜூபி' ஆகிய படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. அதோடு டிரைலரும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில் இன்று(ஆக., 5) அடுத்த பாடலாக ‛ரத்தமாரே...' என்ற பாடலை யுடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளனர். அனிருத்தின் இசையில் இயக்குனர் விக்னேஷ் சிவனின் பாடல் வரிகளில் விஷால் மிஸ்ராவின் குரலில் இந்த பாடல் வெளியாகி உள்ளது. அப்பா - மகன் பாசத்தையும், உறவையும் சொல்லும் விதமாக மெலோடி பாடலாக இருக்கிறது. ரசிகர்களை கவர்ந்து வரும் இந்தபாடல் வைரலாகி டிரெண்ட் ஆனது.