ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‛கேம் சேஞ்சர்'. இதில் கியாரா அத்வானி, அஞ்சலி, சுனில், ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தயாரிப்பாளர் தில் ராஜூ தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிகளில் தயாரிக்கிறார். அரசியல் கதை களத்தில் உருவாகும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். பொதுவாகவே ஷங்கர் படம் என்றால் பிரமாண்டம் இருக்கும். குறிப்பாக பாடல்களுக்கும் அதிக பொருட்ச்செலவில் எடுக்கப்படும். அது இந்த படத்திலும் தொடர்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் ஒரு பாடல் காட்சிக்காக ரூ.10 கோடி செலவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல் காட்சிகளுக்காக சுமார் ரூ. 90 கோடி பட்ஜெட்டை தயாரிப்பாளர் தில் ராஜூ உடன் பேசி ஒப்புக்கொள்ள வைத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.