டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் , தமன்னா, மோகன்லால், ஜாக்கி ஷெராப், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படம் ஆக.10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதற்கான பணிகள் படநிறுவனம் தரப்பில் நடந்து வருகிறது. குறிப்பாக, இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'காவாலா' பாடல் தற்போது வரை டிரெண்டிங்கில் உள்ளது. நடிகர்கள் உள்பட அனைவரும் இந்த பாடலுக்கு வைப் செய்து வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று ஜெயிலர் திரைப்படத்தை ப்ரோமோஷன் செய்யும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 8 கிளைகளுடன் சென்னை மற்றும் பெங்களூருவில் இயங்கி வரும் தனியார் நிறுவனம் ஒன்று ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் வெளியாவதைத் தொடர்ந்து அவர்களது நிறுவன ஊழியர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில், அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் வெளியாக உள்ள நிலையில், எங்களது HR டிபார்ட்மென்டுக்கு விடுப்பு விண்ணப்பங்கள் குவிவதைத் தடுக்க, ஆகஸ்ட் 10ம் தேதி எங்கள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளது.
மேலும், எங்கள் பணியாளர்களின் சிரமத்தைக் குறைக்க, அவர்கள் அனைவருக்கும் ஜெயிலர் படத்திற்கான இலவச டிக்கெட்களையும் நாங்கள் வழங்குகின்றோம் என்றும் அறிவித்துள்ளது. இது அந்த நிறுவனத்தின் சென்னை, பெங்களூர், திருச்சி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் மற்றும் அழகப்பன் நகரில் உள்ள அனைத்து கிளைகளுக்கும் பொருந்தும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் எங்கள் தாத்தாவுக்கும், எங்கள் அப்பாவிற்கும், எங்களுக்கும், எங்கள் பிள்ளைகள் மற்றும் பேரன்களுக்கும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்" என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. அந்த அறிவிப்பின் இறுதியில் 'ரஜினிகாந்த் வாழ்க்' என்ற பதிவுடன் அந்த கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.