ஆக் ஷன் ரோல் என சொன்னதும் அப்பா சொன்ன வார்த்தை : கல்யாணி பிரியதர்ஷன் | ‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா | பிஜூமேனன் நடிப்பதாக இருந்த ‛கீர்த்தி சக்ரா' ; மோகன்லாலுக்கு கை மாறியது ஏன் ? இயக்குனர் மேஜர் ரவி புதிய தகவல் | நிவின்பாலியின் படங்களை பாராட்டிய பவன் கல்யாண் | ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' |
தமிழ் சினிமாவில் சில மிரட்டலான ஆக்ஷன் படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் ஏஆர் முருகதாஸ். அவர் கடைசியாக இயக்கிய 'தர்பார்' படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் 65வது படத்தை இயக்குவதாக இருந்தார். ஆனால், முருகதாஸ் சொன்ன கதை பிடிக்கவில்லை என விஜய் அப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என தகவல்கள் வெளியாகின.
அதற்கடுத்து அனிமேஷன் படம் ஒன்றை இயக்கும் வேலைகளில் ஏஆர் முருகதாஸ் இருப்பதாகச் செய்திகள் வெளிவந்தன. அந்தப் படமும் இதுவரையில் ஆரம்பமாகவில்லை. இதனிடையே, சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் புதிய படம் ஒன்று ஆரம்பமாக உள்ளதாக சில மாதங்களுக்கு முன்பே செய்திகள் வெளிவந்தன.
கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க வருவார் என்கிறார்கள். அப்படத்திற்கான கதாநாயகி தேடல் நீண்ட நாட்களாகவே நடைபெற்று வந்தது. சில முன்னணி நடிகைகளிடம் பேசி கடைசியில் 'சீதா ராமம்' கதாநாயகி மிர்ணாள் தாக்கூரைக் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் சில வாரங்களில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.