அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
எல்லா முன்னணி நடிகர்களும் தங்கள் வாரிசை சினிமா நட்சத்திரமாக மாற்றிக் கொண்டிருக்கும்போது மாதவன் மட்டும் தன் மகனை தேசத்தக்கு பெருமை சேர்க்கும் விளையாட்டுத் துறையில் ஈடுபடுத்தி வருகிறார். அவரது மகன் வேதாந்த் நீச்சல் வீரராக வேகமாக வளர்ந்து வருகிறார். மகன் ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக துபாயில் குடும்பத்தோடு தங்கி இருந்து வேதாந்துக்கு பயிற்சி அளித்து வருகிறார்.
இந்த நிலையில் வேதாந்த், தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார். புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்த தேசிய நீச்சல் போட்டியில் 1500 மீட்டர் ப்ரீ ஸ்டைல் பிரிவில் கலந்துகொண்டு வேதாந்த் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார். முந்தைய சாதனையான 16:06:43 என்பதை 16:01:73 என்கிற அளவில் முறியடித்துள்ளார். இதனை மாதவன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.