சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை என்பதால் சின்னத்திரை சேனல்கள் ஏராளமான சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளன. இந்த 5 நாளும் மக்கள் பெரும்பாலான நேரங்கள் தொலைக்காட்சி முன் உட்காருவதால் அவர்களை திருப்பதிபடுத்த வேண்டிய கட்டயாம் எல்லா சேனல்களுக்குமே இருக்கிறது. இதற்காக பொங்கல் பண்டிகை தொடர்பாக விதவிதமான நிகழ்ச்சி நடத்தி ஒளிபரப்புகின்றன.
என்றாலும் இந்த முறை திரைப்படங்களுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் சேனல்கள் போட்டி போட்டு புதிய படங்களை ஒளிபரப்புகின்றன. அந்த வரிசையில் ஜீ தமிழ் சேனல் 4 புதிய படங்களை ஒளிபரப்புகிறது.
பொங்கல் அன்று அதாவது 14ந் தேதி மதியம் 1.30 மணிக்கு சீறு படம் ஒளிபரப்பாகிறது. இதில் ஜீவா, ரியா சுமன், காயத்ரி கிருஷ்ணா, நவ்தீப், வருண் நடித்திருக்கிறார்கள். ரத்னசிவா இயக்கி உள்ளார். ஜீவாவை கொலை செய்ய கிளம்பும் புரபொஷனல் கில்லரான வருண் அவரையே காப்பாற்றுகிற நிலைக்கு எப்படி மாறுகிறார் என்கிற கதை. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான படம்.
மாலை 4 மணிக்கு விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க.பெ.ரணசிங்கம் ஒளிபரப்பாகிறது. இதனை அறிமுக இயக்குனர் விருமாண்டி இயக்கி இருந்தார். வெளிநாட்டு வேலைக்கு சென்று அங்கு இறந்த கணவனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர மனைவி நடத்தும் போராட்டம் கதை. அக்டோபர் மாதம் ஓடிடி தளத்தில் வெளியான படம்.
15ந் தேதி காலை 9.30 மணிக்கு விஜய்சேதுபதி, அசோக் செல்வன், ரித்திகாசிங், வாணிபோஜன் நடித்துள்ள ஓ மை கடவுளே படம் ஒளிபரப்பாகிறது. இதனை அஷ்வத் மாரிமுத்து இயக்கி இருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. மனைவியை புரிந்து கொள்ள வைக்கும் கடவுளின் கதை.
மாலை 5 மணிக்கு சந்தானம், தாரா அலீஷா, சவுகார் ஜானகி, ஆனந்தராஜ் நடித்த பிஸ்கோத் படம் ஒளிபரப்பாகிறது. இதனை ஆர்.கண்ணன் இயக்கி உள்ளார். பிஸ்கட் கம்பெனியின் தொழிலாளியாக இருக்கும் ஒருவன் அதன் முதலாளி ஆகும் கதை. கடந்த நவம்பர் மாதம் தியேட்டரிலும், டிசம்பர் மாதம் ஓடிடி தளத்திலும் வெளியானது.