தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் |
போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் அவரது 54வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் நாயகியாக மமிதா பைஜூ நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்து கவனம் ஈர்த்த நடிகரும், இயக்குநருமான பாண்டியராஜனின் மகனுமான பிரித்வி பாண்டியராஜன் நடிக்கிறார்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் பிரித்வி பாண்டியராஜன், "புது நாள், புது வாய்ப்பு. தனுஷ் சாரின் 'D54' படத்தில் நடிப்பதற்கு மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். இந்த சந்தோஷமான விஷயத்தைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. வாய்ப்பளித்த இயக்குநர் விக்னேஷ் ராஜாவிற்கு நன்றி. வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி" என்று மகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார்.