பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தியேட்டரில் மாஸ்டர், ஈஸ்வரன் படங்கள் மட்டுமே வெளிவருகிறது. இதனால் மக்கள் சின்னத்திரையில் என்ன படங்கள் ஒளிபரப்பாகும் என்பதில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்கள். இதனால் சேனல்களும் 3 நாள் தொடர் விடுமுறையில் மக்களை மகிழ்விக்க புத்தம் புதிய படங்களை ஒளிபரப்புவதில் தீவிரம் காட்டி வருகிறது.
முன்னணி சேனல் ஒன்றில் வருகிற 14ந் தேதி பொங்கல் அன்று மாலை 6 மணிக்கு சூர்யா நடித்த சூரரை போற்று படம் ஒளிபரப்பாகிறது. 15ந் தேதி மாலை 6.30 மணிக்கு புலிக்குத்தி பாண்டி படம் ஒளிபரப்பாகிறது. இதில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடித்துள்ளனர். 16ந் தேதி ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய காஞ்சனா 3யும், 17ந் தேதி அஜித் நடித்த விஸ்வாசம் படமும் ஒளிபரப்பாகிறது.
விஜய் டிவியில் 14ந் தேதி காலை 10.30 மணிக்கு தெலுங்கில் வெளிவந்து வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படம் அர்ஜுன் வர்மா என்று மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பாகிறது. 15ந் தேதி மதியம் 2.30 மணிக்கு கீர்த்தி சுரேஷ் நடித்த திகில் படமான பெண்குயின் ஒளிபரப்பாகிறது.
ஜீ தமிழ் டிவியில் வருகிற 15ந் தேதி 5 மணிக்கு சந்தானம் நடித்த பிஸ்கோத் படம் ஒளிபரப்பாகிறது. பொங்கல் சிறப்பு படங்கள் பற்றிய அறிவிப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.