30 லிட்டர் தாய்பால் தானம் வழக்கிய விஷ்ணு விஷால் மனைவி | இனி இணைந்து பயணிப்போம்: தயாரிப்பாளர் சங்கம், பெப்சி கூட்டுப் பேட்டி | பிளாஷ்பேக்: வாழ்வே மாயத்தை உல்டா பண்ணிய ஆர்.சி.சக்தி | பிளாஷ்பேக்: ஜாதகத்தை விமர்சித்த படம்: 3 மொழிகளில் வெளியானது | மற்ற மொழிகளில் 50 கோடி வசூலித்த 'லோகா' | 25 வருடங்களை நிறைவு செய்த 'ரிதம்' | செப்டம்பர் 19ல் 4 படங்கள் ரிலீஸ் | மஞ்சு மனோஜுக்குத் திருப்பம் தந்த 'மிராய்' | தாய்மை அடைந்த கத்ரினா கைப்: அடுத்த மாதம் 'டெலிவரி' | 'லோகா' வெற்றி: இயக்குனர் ஜீத்து ஜோசப் எச்சரிக்கை |
கடந்த 2020ம் ஆண்டு சுதா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான படம் சூரரைப் போற்று. கொரோனா தொற்று காரணமாக இந்த படம் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதோடு சிறந்த நடிகர், நடிகை உள்பட ஐந்து தேசிய விருதுகளையும் பெற்றுள்ளது. தற்போது ஹிந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் சூரரைப் போற்று படத்தை ரீமேக் செய்து வருகிறார் சுதா. இப்படத்தில் சூர்யாவும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்.
இந்த நிலையில் சூரரைப் போற்று படத்தை போலவே ஹிந்தி ரீமேக்கும் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக கடந்த சில தினங்களாக ஒரு செய்தி வைரலாகி வந்தது. ஆனால் இந்த செய்தியை தற்போது படக்குழு மறுத்துள்ளது. சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக் படம் கண்டிப்பாக தியேட்டரில் தான் வெளியாகும். தியேட்டரில் ஓடிடி முடித்த பிறகு தான் ஓடிடிக்கு வரும் என்று ஒரு செய்தி வெளியிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்கள்.