தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை | திரைகதையில் திருத்தம்: வா வாத்தியாருக்கு மறுபடப்பிடிப்பு | பிளாஷ்பேக் : அரசு விருது பெற்ற முதல் தமிழ் படம் | பிளாஷ்பேக்: மலேசிய வாசுதேவன் இயக்கிய ஒரே படம் | பிளாஷ்பேக் : இந்தியா முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோல்வி அடைந்த 'அப்னா தேஷ்' | ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? |
ஷாரூக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் ஹிந்தியில் பிரமாண்டமாக உருவாகிவரும் படம் 'ஜவான்'. நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சான்யா மல்ஹோத்ரா, ப்ரியா மணி, சுனில் குரோவர், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். ஷாரூக்கான் இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தில் தீபிகா படுகோனே சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் 'ஜவான்' படத்தின் படப்பிடிப்பிற்காக ஷாரூக்கான் சில தினங்களுக்கு முன் சென்னை வந்தார். சென்னையில் அவர் ஒரு மாதத்திற்கும் மேலாக தங்கி படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறும் என தெரிகிறது.