''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
அமெரிக்காவின் நியூ ஜெர்சியைச் சேர்ந்தவர் கோபி சேத். குஜராத்தைச் சேர்ந்த இவர், 1990ல் அமெரிக்காவில் குடியேறினார். இன்ஜினியரான சேத், அமிதாப் பச்சனின் தீவிர ரசிகர். அவருக்காக, 'பிக் பி எக்ஸ்டெண்டட் பேமிலி' என்ற இணையதளத்தை, கடந்த 30 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்நிலையில், அவர் தன் வீட்டு வாசலில், அமிதாப் பச்சனின் முழு உருவச் சிலையை ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் சமீபத்தில் திறந்து வைத்தார். இந்த சிலை, 'கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியில், அமிதாப்பச்சன் இருக்கையில் அமர்ந்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கோபி சேத் கூறியதாவது:அமிதாப், எனக்கும் என் மனைவிக்கும் கடவுளைப் போன்றவர். சினிமாவில் மட்டுமல்ல; நிஜ வாழ்க்கையிலும் அவர் மிகப் பெரிய ஸ்டார்.தன் ரசிகர்கள் மற்றும் அனைவருடனும் மிக எளிமையாக பழகுபவர். தன்னுடைய வாழ்க்கை வாயிலாக, பலருக்கும் உத்வேகம் அளிக்கிறார். இதனால், அவருக்கு சிலை வைக்க முடிவு செய்து, அதை நிறைவேற்றி உள்ளேன். இந்த சிலை ராஜஸ்தானில் உருவாக்கப்பட்டு, அமெரிக்காவுக்கு கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு, மொத்தமாக 60 லட்சம் ரூபாய் செலவாகி உள்ளது. நான் வீட்டு வாசலில் சிலை வைப்பது, அமிதாப்புக்கு தெரியும். ஆனால், 'நான் இதற்கு தகுதியானவன் அல்ல' என, அவர் பணிவுடன் தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.