பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் |
சுதா கொங்கரா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையமைப்பில், சூர்யா, அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடித்து 2020ம் ஆண்டு ஓடிடியில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் 'சூரரைப் போற்று'. இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கை சுதா இயக்க அக்ஷய்குமார், ராதிகா மதன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தை முதலில் செப்டம்பர் 1ம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால், தற்போது பட வெளியீட்டை அடுத்த வருடம் பிப்ரவரி 16ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அக்ஷய்குமார் நடித்துள்ள சில படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளதால் இப்படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைத்துள்ளதாகத் தெரிகிறது.
அக்ஷய்குமார் நடித்துள்ள 'ஓ மை காட் 2' படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாக உள்ளது. அதற்கடுத்து அவர் நடித்து வரும் 'த கிரேட் இந்தியன் ரெஸ்க்யூ' படம் அக்டோபரில் வெளியாக உள்ளது. அடுத்தடுத்து பட வெளியீடுகளில் சிக்கிக் கொள்ள வேண்டாமென்று தான் அடுத்த வருடம் பிப்ரவரிக்கு தள்ளி வைத்துள்ளதாகச் சொல்கிறார்கள். அக்ஷய் குமார் நடித்து கடைசியாக வெளிவந்த ஐந்து ஹிந்திப் படங்களுமே தோல்வியைத் தழுவியது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.