ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' | 'கேம் ஆப் த்ரோன்ஸ்' புதிய தொடர் வெளியானது: உலகம் முழுக்க வரவேற்பு | 'மாஸ்டர் பிளான்' படத்தில் பொலிட்டிக்கல் பிளாக் காமெடி | வில்லனாக நடிக்க விரும்பும் முனீஷ்காந்த் | பிளாஷ்பேக்: 'நிழல்கள்' ராதுவை தெரியுமா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 பேருக்கு வாழ்வளித்த கண்ணதாசன் |

சுதா கெங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் சூரரைப்போற்று. 5 தேசிய விருதுகளை வென்ற இந்த படத்தை தற்போது ஹிந்தியில் அக்சய் குமாரை வைத்து ரீமேக் செய்து வருகிறார் சுதா. இப்படத்தில் சூர்யாவும் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். சில மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் தற்போது சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார் அப்படம் குறித்து ஒரு அப்டேட் கொடுத்துள்ளார்.
அதில், ஹிந்தி சூரரைப்போற்று படத்தின் பாடல் ரெக்கார்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் பாடல்கள் பிரத்யேகமாக ஒலிப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், இந்த பாடல்கள் வெளியாவது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த பதிவுடன் இயக்குனர் சுதா கெங்கராவுடன் தான் எடுத்துக்கொண்ட ஒரு செல்பியையும் பதிவிட்டுள்ளார் ஜி.வி.பிரகாஷ்குமார்.




