அஜித் - ஷாலினியின் ரொமான்ட்டிக் போட்டோ வைரல் | 'மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்' கோவை குணா காலமானார் | லண்டனில் ‛பொன்னியின் செல்வன் 2' பின்னணி இசை மும்முரம் | தியேட்டரில் டிக்கெட் விற்பனை செய்த நிவேதா பெத்துராஜ் | 'ஆர்ஆர்ஆர்' ஆஸ்கர் விருதுக்காக நான் செலவு செய்யவில்லை - தயாரிப்பாளர் டிவிவி தனய்யா | சிரஞ்சீவியின் சகோதரர் மகள், கணவருடன் கருத்து வேறுபாடு? | பெண் அரசியல்வாதி என்றால் சேலை தான் கட்ட வேண்டுமா? - மஞ்சு வாரியர் | பிறக்கும்போதே பெற்றோரை குழப்பி விட்டேன் ; ராணி முகர்ஜி கலாட்டா | 130 பேருக்கு 10 கிராம் தங்கம் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | ஏழைகளுக்கு இலவச இருதய சிகிச்சை அறிவித்த பாலகிருஷ்ணா |
தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை கடைசியாக இயக்கிய செல்வராகவன், சாணிக்காயுதம், பீஸ்ட் படங்களைத் தொடர்ந்து தற்போது பகாசூரன் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சமீபகாலமாக சமூகவலைதளங்களில் பல வாழ்க்கை தத்துவங்களை உதிர்த்து வருகிறார் செல்வராகவன். அந்த வரிசையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த பதிவில், ‛‛தனியாகத்தான் வந்தோம், தனியாகத்தான் போவோம், நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது? துணை என்பது கானல் நீர், நெருங்க நெருங்க தூரம் ஓடும்'' என்று பதிவிட்டுள்ளார்.
செல்வராகவனின் இந்த பதிவு பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. குறிப்பாக, சமீபத்தில்தான் அவரது தம்பியான நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா ரஜினியை விவாகரத்து செய்தார். இந்த நிலையில் செல்வராகவனும் இப்படி துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும் என்று பதிவிட்டிருப்பது பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே செல்வராகவன் தனது முதல் மனைவியான நடிகை சோனியா அகர்வாலை விவாகரத்து செய்த பின் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்தார்.