ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
ரா.வெங்கட் இயக்கி உள்ள படம் ‛கிடா'. இந்த படம் சமீபத்தில் சென்னையில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் முதல் இடம் பிடித்து விருதினை பெற்றது. இதில் சில மாதங்களுக்கு முன் மரணம் அடைந்த ‛பூ' ராமு கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அவருடன் காளி வெங்கட், பாண்டியம்மா, கமலி, லோகி, மாஸ்டர் தீபன் நடித்திருக்கிறார்கள். எம்.ஜெயபிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், தீசன் இசை அமைத்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திரைக்கு வருகிறது.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் ரா.வெங்கட் கூறியதாவது: இந்த படம் விருதுக்காக எடுக்கப்பட்டதல்ல. தியேட்டருக்கு வருவதற்கு சற்று தாமதம் ஆனதால் பெஸ்டிவலுக்கு அனுப்பி வைத்தோம். அது அனைவராலும் பாராட்டப்பட்டு விருதுகளை குவித்தது. கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது படத்தை பார்த்த அனைவரும் அதில் நடித்திருந்த ‛பூ' ராமு பற்றி விசாரித்தார்கள். அவருக்கு கட்டாயம் தேசிய விருது கிடைக்கும் என்றார்கள். சென்னை திரைப்பட விழாவிலும் அதையே சொன்னார்கள். நாங்களும் படத்தை தேசிய விருதுக்கு அனுப்ப இருக்கிறோம். பூ ராமுக்கு விருது கொடுத்து கவுரவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
தீபாவளிக்கு புதுச்சட்டை கேட்கிறான் பேரன். ஏழை தாத்தாவால் அதை வாங்கி கொடுக்கிற அளவிற்கு பணமில்லை. அதனால் தனது ஆட்டை அவர் கசாப்பு கடை காரனுக்கு விற்கிறார். அந்த ஆட்டை நேசிக்கும் பேரன் எனக்கு சட்டையே வேண்டாம் ஆடுதான் வேண்டும் என்கிறான். இந்த நிலையில் ஆடு திருடு போகிறது. அந்த ஆடு இவர்களிடம் வந்து சேர்ந்ததா என்பதுதான் படத்தின் கதை. என்றார்.